#GameChanger திரைப்படத்தின் 2வது பாடல்… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில்…

2nd song from #GameChanger movie...crew released new update!

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.  இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ‘ஜரகண்டி’ என்ற பாடலை வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைபடத்தின் இரண்டாவது பாடல் இம்மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.