+2, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு – திட்டமிட்ட தேதிகளிலேயே வெளியாகும்!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம்…

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது.  இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு  25 ஆம் தேதி முடிவடைந்தது.  அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்.26 தொடங்கி ஏப். 8 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது.  இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, மே.6 மற்றும் மே. 10 ஆம் தேதிகளில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.