தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 7ம் தேதி முதல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வந்து வழி அனுப்பி வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 260 பயணிகள் நேற்று ஹஜ் புனித பயணம் சென்றனர். அவர்களை வழியனுப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
கடந்த ஜூன் 7ம் தேதி முதல் இன்று வரை 14 விமானங்களில் 2800 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இன்னும் 1200 பயணிகள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரித்தார்.







