பயன்பாடின்றி பாழாகி வரும் 250 புதிய ஆம்புலன்ஸ்; திருவள்ளூர் அருகே அதிர்ச்சி!…

திருவள்ளூர் அருகே 250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம் பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட…

திருவள்ளூர் அருகே 250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம் பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 250 புத்தம் புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

1962 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் இந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சைகளை பெற முடியும். தற்போது இவை பயன்பாடின்றி கிடப்பதால் துருப்பிடித்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இருதரப்பிலும் தரப்பட வேண்டிய நிதி கொடுக்கப்படாததால்தான் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூரில், துருப்பிடிக்கும் அபாயத்தில் உள்ள 250 கால்நடை ஆம்புலன்ஸ்கள், குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, அவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.