2022ம் ஆண்டுக்கான உலகின் நம்பர் ஒன் விமான சேவையில் கத்தார் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச நாடுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு பொதுமக்கள் அதிகமாக விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் அனைத்து நாடுகளிலும் விமான சேவை போக்குவரத்து நடைமுறையில் இருந்து வருகிறது.
கொரோனா பரவல் காலகட்டத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உலகநாடுகள் பலவும் சர்வதேச விமான சேவைக்கு தடைவிதித்து. அந்த காலக்கட்டங்களில் வெளிநாடுகளில் உள்ள மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்ல கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலானது விமான சேவையில் உள்ள நிலைத்தன்மை, அதன் தரம், சேவை, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கத்தார் விமான சேவை ‘ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்’ தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர் நியூ சீலேண்டு மற்றும் எத்திகாடு ஏர்வேய்ஸ் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கத்தார் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதன் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் போன்ற காரணங்களால் கத்தார் ஏர்லைன் உலகின் சிறந்த விமான சேவை இயக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








