காரில் சென்ற நபரை மறித்து ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்கள்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் இரும்பு…

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த
நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில்
இரும்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கார் ஓட்டுனராக,
பெத்தம்பாளையத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் ஓலப்பாளையம் நிறுவனத்தில் இருந்து 20 லட்சம் ரொக்கத்தை,
ஈங்கூரில் உள்ள மற்றொரு கிளை நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த சிலர் வழி கேட்பது போல நடித்து, அவரை தாக்கி
அவர் கொண்டு வந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.மேலும், சத்தியமூர்த்தியை
காரில் கடத்தி ரங்கம்பாளையம் அருகே உள்ள குறிஞ்சி நகர் என்ற இடத்தில் இறக்கி
விட்டு, கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இது குறித்து சென்னிமலை போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

—-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.