கட்டிலிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

அரியலூர் அருகே 2 வயது மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் தினேஷ் என்பவர் வசித்து வந்தார். இவரின்…

அரியலூர் அருகே 2 வயது மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் தினேஷ்
என்பவர் வசித்து வந்தார். இவரின் மனைவி திவ்யாவுடன், அவர்களின் 2 வயது குழந்தை விக்னேஷ் கட்டிலில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது குழந்தை விக்னேஷ், கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை அனுமதித்தபோது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் இருந்த தினேஷ், வீட்டில் தனியாக இருந்த போது, மின்வயரை கையில் சுற்றிக்கொண்டு ஸ்விட்ச் பாக்ஸில் கையை விட்டதாகவும், அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.