வட மாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

பள்ளிபாளையம் அருகே வடமாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ளது.…

பள்ளிபாளையம் அருகே வடமாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ளது. இங்கு குடியிருக்கும், வடமாநில கும்பல் குட்கா விற்பனையில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளது. இதுகுறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், வெப்படை காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது வடமாநில கும்பல், குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக வாகனத்தில் கடத்த முயன்றனர். காவல்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பியோடினர்.

இதையடுத்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய வடமாநில கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.