வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

உத்தர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த 17 மற்றும் 19 வயது சகோதரிகள் காலை…

உத்தர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த 17 மற்றும் 19 வயது சகோதரிகள் காலை கடனை கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளனர். ஆனால் சென்றவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் இருவரையும் தேடி சென்றுள்ளனர். நீண்ட நேரத் தேடலுக்கு பிறகு ஒரு பெண்ணின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இன்னொரு பெண்ணின் உடல் மரத்தில் தூக்கில் இடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து, உடனடியாக உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலிசார், இரு பெண்களின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். பின்னர், விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் குறித்த முழு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.