மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.98 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 137 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை வாலிபர் கைது செய்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மும்பையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ரகசிய அறைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.98 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 137 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Based on intel, Air Customs Officers intercepted a pax who arr'd in 6E 908 dt 01.07.22 from Mumbai. During personal search & baggage examination, 11 bundles of foreign origin gold in paste form recovered, which yielded into seizure of 2.137 Kgs val'd ₹98.55 Lakh. Pax arrested. pic.twitter.com/LLc4kMQ2hD
— Chennai Customs (@ChennaiCustoms) July 2, 2022
இது தொடர்பாக முகமது இம்ரானை கைது செய்து துபாயில் இருந்து மும்பைக்கு வந்து பின்னர் உள்நாட்டு பயணியாக வந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெவித்தனர்.