முக்கியச் செய்திகள் இந்தியா

உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!

மகாராஷ்டிராவில் தாய் இறந்ததால் 18 மாத குழந்தை ஒன்று 2 நாட்களாக உணவு இல்லாமல் தவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லததால் குழந்தை உணவு மற்றும் பால் இல்லாமல் இரண்டு நாட்களாக பரிதவித்துள்ளது.
இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பெண் உயிரிழந்தது தெரிய வந்ததை அடுத்து, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அச்சத்தால் அக்கம் பக்கத்தினர் யாரும் குழந்தைக்கு உதவ முன் வரவில்லை.

இதனிடையே அந்த குழந்தைக்கு காவலர் சுசிலா பொறுப்பேற்று உணவு வழங்கினார். இதையடுத்து காய்ச்சல் காரணமாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு கொரோனா தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்படாததால் அவரை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் கொரோனாவால் இறந்திருக்கிறாரா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அவரது கணவர் உத்தர பிரதேசத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும், அவர் வருகைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜாவீத் கூறினார்.

Advertisement:

Related posts

“திமுகவை எதிர்க்கும் கட்சி என்ற தகுதியை அதிமுக இழந்துவிட்டது”: திருமாவளவன்

Karthick

மெட்ரோ ரயில் நிலையப் பணியில் திருநங்கை: பொதுமக்கள் வரவேற்பு!

Niruban Chakkaaravarthi

“மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த” கமல்ஹாசனின் உருக்கமான பதிவு!

Karthick