சென்னை மணலி பகுதியில் 35 ,000 ஆயிரம் கலர் பென்சில் மற்றும் 600 ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட புத்தகம் படிக்கும் விநாயகர் சிலை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாத நிலையில் இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னை மணலி சின்னசேக்காடு காந்திநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சர்வ மங்கள விநாயகர் கோவில் நிர்வாகம் சார்பில் 35,000 ஆயிரம் கலர் பென்சில் மற்றும் 600 ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட புத்தகம் படிப்பது போல் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் அதே இடத்தில் மூன்று அடி தக்காளியால் செய்யப்பட்ட தத்ரூப விநாயகர் உருவாக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விநாயகர் சிலை சுமார் 30 நாட்களாக சிலை வடிவமைக்கும் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியான இன்று ஊர் மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் .இந்த விநாயகர் சிலையானது நான்கு நாட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வரும் 4 தேதி விநாயகர் சிலைகள் மூலம் அமைக்கப்பட்ட கலர் பென்சில் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ்களையும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
சின்ன சேக்காடு பகுதியில் உள்ள காந்திநகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் விதவிதமாக விநாயகர் சிலைகள் அமைப்பது வழக்கம். அது போல இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கலர் பென்சில் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் மூலம் விநாயகர் சிலையானது செய்யப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் இந்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே அந்த விநாயகர் சிலை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.