புனே கார் விபத்து – 17 வயது சிறுவனுக்கு ஜாமின்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனேயில் பிரபல தொழிலதிபரின் 17 வயது மகன்,…

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனேயில் பிரபல தொழிலதிபரின் 17 வயது மகன், கடந்த மே 19ம் தேதி குடிபோதையில் போர்ச் டெய்கான் காரை ஓட்டியதாகவும், ​​கல்யாணி நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில், சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்நபர் உட்பட குடும்பமே சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில், சாட்சியங்களை மாற்றியதற்காகக் கைதான தந்தை விஷாலுக்கு சில தினங்களுக்கு முன்பு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், சிறுவனின் தாயார், தாத்தா இன்னும் சிறையில் உள்ளனர்.

17 வயது சிறுவனின் தந்தைவழி அத்தை தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது. உத்தரவின்படி, சிறுவனை அவரது தந்தைவழி அத்தையின் பராமரிப்பில் இருக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.