மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த கன மழை காரணமாக மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளன. செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/PMOIndia/status/1416613059003486210
இன்று அதிகாலை விக்ரோலி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போது வரை செம்பூரின் பாரத் நகர் பகுதியில் 15 பேரும், விக்ரோலியின் சூர் நகர் பகுதியிலிருந்து 9 பேரும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, இதில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு தலைவரும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Central_Railway/status/1416622048516792322
மும்பை நகரில் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 156.94 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 143.14 மி.மீ மற்றும் மேற்கு பகுதிகளில் 125.37 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








