நடிகர் ஷாருக்கானின் அறிமுகப்பாடலான ’வந்த இடம்’ என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் 1000 பெண் நடனக் கலைஞர்கள் நடனமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ – சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
வாங்க, ஆட்டம் போட நேரம் வந்தாச்சு! 😎⁰#VandhaEdam பாடல் இப்போது வெளியாகி உள்ளது!
Vaanga Aaatam Poda Neram Vandhachu! 😎⁰#VandhaEdam Paadal Ipodhu Veliaagi Ulladhu!⁰⁰#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. https://t.co/0L2x13Yy00 pic.twitter.com/KILV6xpBh3— Shah Rukh Khan (@iamsrk) July 31, 2023
இந்நிலையில், ஷாருக்கான் அறிமுகமாகும் ‘வந்த இடம்’ என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பை நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார்.
இந்த பாடலில் ஷாருக்கான் 1,000 பெண் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் நடனமாட சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டதாகவும் 5 நாள்கள் படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







