சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை; 6 பேர் கைது!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பதற்காக, அதை வாங்க வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை டெல்லி அணிகளுக்கு…

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பதற்காக, அதை வாங்க வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 10ம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கியது.

பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், டிக்கெட் விற்பனையின்போது சந்தேகப்படும்படியான 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த முறை டிக்கெட் வாங்குவதற்காக இரவிலிருந்து மைதானத்திற்குள் பதுங்கியிருந்த நால்வரையும், மீண்டும் டிக்கெட் வாங்குவதற்காக வரிசைக்குள் ஒழுங்கற்ற முறையில் புகுந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், காலை 7 மணிக்கு விற்பனை தொடங்கிய நிலையில் சற்று நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.