முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளதாகவும், இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் என தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தும் இந்த பணி நாட்டின் வலிமையை காட்டுகிறது எனத்தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியா சுயசார்பு நாடாக தொடர்ந்து செயல்பட உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா முழுவதும் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இது தவிர முன்னுரிமை அடிப்படையில் இணைநோய்கள் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 50 வயதுக்கு உட்பட்டோரில் 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது..நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை 3 ஆயிரத்து 6 முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி குறித்த சந்தேகங்களை தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1075 என்ற உதவி எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம். கொரோனா தொற்று இந்தியாவில் பரவிய ஒரு ஆண்டுக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

StoryForGlory; டெல்லியில் பிரமாண்டமாக இறுதி போட்டி நடத்திய DailyHunt

G SaravanaKumar

’வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’: முதல்வர் அன்னையர் தின வாழ்த்து

Halley Karthik

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்..

G SaravanaKumar

Leave a Reply