முக்கியச் செய்திகள் உலகம்

54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்தில் 12 வயது சிறுவன் அறிவியல் ஆராய்ச்சிக்காக காந்தங்களை விழுங்கி சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ப்ரீஸ்ட்விச் பகுதியை சேர்ந்தவர் 12 வயதான ரிலே மோரிசன். இவர் அறிவியல் குறித்த சோதனைகளை செய்வதில் ஆர்வமுடையவர். இந்நிலையில் ஒரு நாள் பந்து வடிவில் இருந்த சிறிய காந்தங்களை விழுங்கி வெளியிலுள்ள காந்த ஈர்ப்பு பொருட்கள் தன் உடலில் ஒட்டுமா ஒட்டாதா என்று சோதனை செய்துள்ளார். மேலும் அவற்றை வெளியேற்றும் போது அது எப்படி இருக்கும் என்பதை காணவும் ஆர்வமாக இருந்துள்ளார். பின்னர், காந்தத்தை விழுங்கியதால் 2-3 நாட்களாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காந்தத்தை விழுங்கி 4 நாட்களாகியும் அவை வெளியேறாததால் பயந்து போன ரிலே, தன் அம்மாவிடம் தற்செயலாக காந்தங்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், சிகிச்சைக்காக மருந்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளிப்பட்டன. பரிசோதனை செய்த மருத்துவர்கள் அச்சிறுவனின் வயிற்றிலிருக்கும் காந்தங்கள் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திருக்கலாம் என்று தெரிவித்தனர். பின்னர் 6 மணி நேர சிகிச்சை போராட்டத்திற்கு பிறகு வயிற்றிலிருந்து 54 காந்தங்களை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். மேலும் அச்சிறுவனின் உடல் நிலை தற்போது குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

Halley Karthik

வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar

கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர்

G SaravanaKumar

Leave a Reply