வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்று கூறுவதன் பொருளே இரண்டிலும் நிறைய நபர்களை சார்ந்த ஒன்றாக கருதப்படுவதால் தான். அதை ஒரு மனிதர் தவறாக புரிந்து கொண்டதால் என்னவோ 12 திருமணம் செய்துள்ளார்.
ஆப்பிரிக்கா நாடு கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் வசித்து வரும் மூசா ஹசஹ்யா கசேரா முரட்டு சிங்களா சுற்றி திரியும் 90ஸ் kids ku tough கொடுக்குற வகையில் 12 மனைவிகள், 102 குழந்தைகள் 578 பேர குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஒரு திருமணம் செய்தாலே மண்டை காய்ந்து போய்விடும் . 12 திருமணம் செய்த இவரின் நிலைமை சொல்லியா தெரிய வேண்டும். இத்தனை பெரிய குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கும் இவர் முதலில் இது விளையாட்டாக தான் இருந்தது தற்போது பிரச்சனையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ” தன் குடும்பத்திற்கு வெறும் 2 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ள நிலையில் இது போதுமானதாக இல்லை” என்றும் தெரிவித்திருகிறார். சரியான உணவு, கல்வி, உடை போன்ற அடிப்படை தேவைகள் கூட என்னால் குடும்பத்திற்கு வழங்க முடியவில்லை என்றும் இதனால் என்னுடைய மனைவிகளில் இருவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கருத்தடை முறைகளைப் மனைவிகள் பயன்படுத்தினாலும் மூசா பயன்படுத்தமாட்டாராம். அதன் விளைவு தான் என்றும் தெரிவித்துள்ளார். என்னுடைய 102 பிள்ளைகள் 6 வயது முதல் 51 வயது வரை உள்ளன. குழந்தைகளில் முதல் பிள்ளை மற்றும் கடைசிப் பிள்ளையின் பெயர்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது என்றும் மனைவிகள் தான் குழந்தைகளை அடையாளம் கண்டு அழைக்க உதவுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகளை படிக்க வைக்க மூசா போராடுவதால் அரசின் உதவியை நாடியுள்ளார்.









