தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற தனித்தேர்வர்கள் மற்றும் வெளியிடப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களும், துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.







