விசிக மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

விசிக மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று(ஜூன்.14) மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 12 தலைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு…

1. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம்.

2. வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

3. குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

4. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ( NPR), தேசிய குடிமக்கள் பேரேடு ( NRC) ஆகியன தயாரிப்பதைக் கைவிட வேண்டும்.

5. மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

6. கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அறிவித்திட வேண்டும்.

7. ஜம்மு- காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

8. மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும்.

9. சமவாய்ப்பு ஆணையத்தை அமைத்திட வேண்டும்.

10. பீகார் மாநிலம் புத்தகயாவிலுள்ள மகா போதி விகாரையைப் பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

11. வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது.

12. பொது சிவில் சட்டம் ( UCC) கொண்டுவரும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.