“11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து” – அமைச்சர் அன்பில் மகேஷ்!

மாணவர்களுக்கு அழுத்தத்தை குறைப்பதற்காக 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, புதிதாக வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நடப்பாண்டு முதலே அமலுக்கு வருகிறது.

இனிமேல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது.இந்த புதிய கல்விக் கொள்கையின்படி, 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள 3, 5, மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற பரிந்துரையை நிராகரிப்பதாக அமைந்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.