புதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் புதியதாக 11 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று…

நாட்டில் புதியதாக 11 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 11 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 242 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 849 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.