10ம் வகுப்பு பொதுத்தேர்வு – கணிதத்தில் 20,691 பேர் சென்டம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20,691 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20,691 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை  http://tnresults.nic.in , http://dge.tn.gov.in மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 8,94,264 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 91.55% சதவீத மாணவர்கள், அதாவது 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,22,591 (94.53%) மாணவியரும், 3,96,152 (88.58%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை விட 0.16% உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 

13,510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 12,491 (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 (87.69%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1,364 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தம் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை :

தமிழ் – 8
ஆங்கிலம் – 415
கணிதம் – 20,691
அறிவியல் – 5,104
சமூக அறிவியல் – 4,428

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.