28.6 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமேசான் ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்? – அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் வர்த்தகமான அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

டிவிட்டர் பங்குகளை எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்ற உள்ள நிலையில், டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துவருகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனத்தில் இருந்தும் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் இந்த திட்டத்தை பல மாத ஆய்வுக்குப் பின்னரே எடுப்பதாகவும், ஏற்கெனவே லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமேசானில் எதிர்ப்பார்த்த அளவு விற்பனை இல்லை என்பதாலும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கையில் பணப்புழக்கம் இல்லை என்பதாலும் லாபம் இல்லாத துறைகளில் பணியாற்றுபவர்களை பணி நீக்க செய்ய முடிவு செய்துள்ளது. இவ்வாறு அமேசான் நடவடிக்கை எடுத்தால் வரலாற்றில் மிகப்பெரிய பேசுப்பொருளாக இது மாறும் என ஆங்கிலப்பத்திரிகைகள் கணித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

அண்மையில் டிவிட்டர் நிறுவனமும், அதைத்தொடர்ந்து முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா ஆகியவை பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading