100 மாணவர்கள்: ஒரே ஆசிரியருடன் செயல்படும் பள்ளி – பெற்றோர் கோரிக்கை

செங்கம் அருகே பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்ரிப்பாளையம் ஊராட்சியில் செயல்படும்…

செங்கம் அருகே பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்ரிப்பாளையம் ஊராட்சியில் செயல்படும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் நூறு பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி ஒரே ஆசிரியரை கொண்டு இயங்குவதால் பிள்ளைகளின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அண்மைச் செய்தி: அதிமுக ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது: ஓபிஎஸ் உறுதி

மேலும், ஆசிரியர் இல்லாததால் பள்ளி மாணவியே மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நிலையும் உருவாகியுள்ளதாகவும், பள்ளிக்கு செல்ல முறையான பாதை இல்லாததால் வயல்வெளியில் இறங்கி வரும் அவலமும் அரங்கேறி வருவதாகவும் குற்றம்சாட்டினர். எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் ஆசிரியர்களை நியமித்தும், பள்ளிக்கு செல்ல பாதை அமைத்த தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.