“நெல்லையில் 2024-ல் மட்டும் 100 பேர் போக்சோவில் கைது” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போக்சோ வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில்…

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போக்சோ வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்ததாவது;

நெல்லை மாவட்டத்தில் 2024-ல் மட்டும், பதிவு செய்யப்பட்ட போக்சோ  வழக்குகளில் சம்பந்தபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளுக்கெதிரான குற்ற வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 203 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு ஈட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில், 96 ரவுடிகள், 34 பேர்  கஞ்சா வழக்கிலும்,18 பேர் கொள்ளை, திருட்டு வழக்கிலும், 04 பேர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு திருநெல்வேலியில சாதி ரீதியாக கொலைகளை நடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.