சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் 10 புதிய ஆவின் தயாரிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவைகளை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விலை மற்றும் அளவு விவரங்களை பார்ப்போம்.
பலாப்பழ ஐஸ்கிரீம் 125 மி.லி -45 ரூபாய்.
வெள்ளை சாக்லேட் 45 கிராம் -30 ரூபாய்.
குளிர்ந்த காப்பி 200 மி.லி – 35 ரூபாய்.
வெண்ணெய் கட்டி 200 கிராம் – 130 ரூபாய்.
பாசந்தி – 100 மி.லி – 60 ரூபாய்.
ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம் -120 ரூபாய்
பாலாடைக்கட்டி 200 கிராம் – 140 ரூபாய்
அடுமனை யோகர்ட் 100 கிராம் – 50 ரூபாய்
ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம் – 12 ரூபாய்
ஆவின் வெண்ணெய் முறுக்கு 200 கிராம் – 80 ரூபாய்
பின்னர் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மற்ற நிறுவனங்கள் பால் விற்பனை அதிகரித்துள்ளதால் ஆவின் பால் 50 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 10 பொருட்கள் அறிமுகம் செய்வதன் மூலமாக மாதம் ரூ.2 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எந்த கலப்படமும் இல்லாமல் தாய் பாலுக்கு நிகராக இந்த பொருட்கள் இருக்கும். எல்லா பொருட்களும் மிகவும் சிறப்பாக இருக்கும். தமிழக முதல்வர் ஆணைக்கு ஏற்ப கடந்த நிதிநிலை அறிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 10 புதிய அறிவிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உழவர்களின் வாழ்வாரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஆணைக்கு இணங்க இந்த புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால் பாக்கெட்களில் சினிமா விளம்பரங்கள் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. ஆவின் வாட்டர் குறித்த அறிவிப்பு முதல்வர் அறிவிப்பார் என்றார் அமைச்சர் நாசர்.