முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

GOT-ஐ தொடர்ந்து, வருகிறது “ஹவுஸ் ஆப் ட்ராகன்”


-செ.யுதி

“கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரின் இறுதி சீஸன் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இந்த வார்த்தைக்கு அறிமுகம் தேவையா என்ன ? நம்மில் பலர் வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்ததே இந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மூலம் தான். ஒன்று கூகுளில் தேடிப் பார்த்து இருப்போம் இல்லை என்றால் நண்பர்கள் கூறி பார்த்திருப்போம். யார் கூறி இருந்தாலும் அவர்கள் கூறும் வெப் சீரிஸ் லிஸ்டில் எப்படியும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துவிடும் இந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸ். இதில் மொத்தம் 8 அத்தியாயங்கள் வெளிவந்தது. ஸ்டார்க், அர்ரின், பராத்தியன், டார்கேரியன், லானிஸ்டர், க்ரேஜாய், வொயில்டுலிங்க்ஸ், ரீட், நைட்வாட்ச், ஃப்ரே, போல்டன், டல்லி, மோர்மன்ட், டைரல், மார்டல், டார்த் என பல குடும்பஙளுக்கு இடையில் நடக்கும் நட்பு, துரோகம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, குரோதம், இழப்பு, காதல், அருவருப்பு போன்ற பல்வேறு உணர்ச்சிகளால் பின்னி பிணைக்கப்பட்ட கதைதான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. முதல் சீஸன் முதல் எபிசோடை ஒருவர் பார்த்துவிட்டால் போதும் அவரை எட்டாவது சீ்ஸனுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த சீரிஸ். எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்..ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித் தனியே பேக் ஸ்டோரி எனக் கதை பல அடுக்குகளாக விரிந்து பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாயாஜால உலகையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட லோக்கேஷன்களை நேரெதிரே நிறுத்தியிருப்பார்கள். இந்த சீரிஸ் அமெரிக்க நாவல் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்ற எழுத்தாளரின் நாவல் தொடர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ் ஆகும்.

 

இந்த சீரிஸின் முதல் சீஸன் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இறுதி சீஸன் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் வெளியானது. மொத்தமாக 8 சீஸன் 73 எபிஸோடுகளைக் கொண்டுள்ளது இத்தொடர்.
இதுவரை மொத்தம் 59 எமி விருதுகளைக் குவித்துள்ள இந்த தொடரின் ஸ்பின் ஆப் தொடராக “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தற்போது வெளியாகவுள்ள நிலையில் பலரும் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸை மீண்டும் பார்த்து வருகின்றனர். இத்த புது சீரிஸின் கதை “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” கதைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. போர்க் காலத்தை மையப்படுத்திய கதை என்பதால் பல சண்டைக் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” கதையில் பல ராஜ குடும்பங்கள் அரியணைக்குச் சண்டையிட்டு வந்தன. ஆனால் இந்த “ஹவுஸ் ஆப் ட்ராகன்”” தொடரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரியணைக்குச் சண்டையிட உள்ளனர். மேலும் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரில் வரும் 3 ட்ரேகன்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்த நிலையில் தற்போது “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரில் 18 ட்ரேகன்கள் இடம்பெற உள்ளன. டார்கேரியன் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த புது தொடர் மிக நீண்ட போர் மற்றும் அதன் பின்புலத்தை கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளதால், இத்தொடர் 2ல் இருந்து 3 சீஸன்களாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை சீஸன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும், ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி சீஸன் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரின் இறுதி அத்தியாயம் சரியாக எழுதப்படாமல் சற்றே அவசரமாக முடித்ததுபோல் இருந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரின் மிக முக்கிய கதாபாத்திரங்களுள் ஒன்றான “ஜான் ஸ்னோ” என்னும் கதாபாத்திரத்திற்குத் தனி தொடர் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றிய அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இத்தொடர் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

-செ.யுதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

EZHILARASAN D

இரண்டு நாட்களில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Web Editor

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : சென்னை மாநகராட்சியில் பிஆர்ஓ நியமனம்

EZHILARASAN D