மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 10 லட்சம் பணி இடங்களுக்கு அடுத்த ஒன்றரை வருடங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக சமீபகாலமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகிறது. இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் கடந்த 2021 ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 12.6 சதவீதமாகவும், இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் இருந்து குறைந்துள்ளது என தேசிய புள்ளிய அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கொரோனா தொற்று நோயின் முதல் அலையின் போது காணப்பட்ட 20.8 சதவீத அளவிலிருந்து இது குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை மத்திய அமைச்சகம் மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் அடுத்த ஒன்றரை வருடங்களுக்குள் நிரப்படும் என தெரிவித்துள்ளார்.
PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.
— PMO India (@PMOIndia) June 14, 2022
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அமைச்சகம் மற்றும் அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் என மொத்தம் 10 லட்சம் பணியிடங்களுக்கான பணியாளர்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என பதிவிடப்பட்டுள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் தனது ட்விட்டர் பதிவில், 50 ஆண்டுகளில் மிக மோசமான வேலைவாய்ப்பு விகிதத்தை அனுபவித்து வருகிறோம். கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. பிரதமர் இது குறித்து இன்னும் எவ்வளவு காலம் ட்விட்டரில் விளையாடி மக்களை திசை திருப்புவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.







