அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், குழு போட்டிகளிலும், தனித்திறன் போட்டிகளிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி, வீரர்களை அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: டெல்லி அணி அபார வெற்றி
மேலும், சென்னைக்கு அருகே Mega Sports City அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், வடசென்னை பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரித்து, 4 மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என தெரிவித்த அவர், ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல் என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








