11-ம் வகுப்பு பொது தேர்வில் பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம் குறித்துப் பார்க்கலாம்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 3,61,454, மாணவிகள் 4,15,389 தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
முன்னதாக 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது பிளஸ்-1 முடிவு வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 11-ம் வகுப்பு முடிவுகளில் பாட வாரியான தேர்ச்சி விகிதத்தை தற்போது பார்க்கலாம்…
11-ம் வகுப்பு தேர்வு முடிவில் பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
அறிவியல் பாடப்பிரிவுகள் – 93.38%
வணிகவியல் பாடப்பிரிவுகள் – 88.08%
கலைப்பிரிவுகள் – 73.59%
தொழிற்பாடப் பிரிவுகள் – 81.60%
முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவிகிதம்:
இயற்பியல் – 95.37%
வேதியியல் – 96.74%
உயிரியல் – 96.62%
கணிதம் – 96.01%
தாவரவியல் – 95.30%
விலங்கியல் – 95.27%
கணினி அறிவியல் – 99.25%
வணிகவியல் – 94.33%
கணக்குப்பதிவியல் – 94.97%







