மத்தியபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரது வாழ்க்கை ஒரு நாளிலேயே முழுவதுமாக மாறிவிட்டது.
மத்தியபிரதேசத்தில் வசிக்கும் விவசாயி லகான் யாதவ், தனது சிறிய நிலத்தில் பயிரிடும் பயிர்களை நம்பியே இருந்துள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒரே நாளில் அவரது வாழ்க்கை மாறிவிட்டது. தனது சொந்த நிலத்தில் வித்தியாசமான கல் போல் ஒன்று அவரது கைக்கு கிடைத்துள்ளது. அது சாதாரண கல் என்று ரூ.200க்கு ஏலத்தில் விட்டுள்ளார்.
ஆனால் அப்போதுதான் அது விலைமதிப்புமிக்க வைரம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு உரிய அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்து அதற்கான பணத்தை வாங்கியுள்ளார். எந்த காரணத்திற்காகவும் அந்தப் பணத்தை வீணாக்க போவதில்லை என விவசாயி லகான் யாதவ் தெரிவித்துள்ளார்.
தனக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களது படிப்பு செலவுக்கே இந்தப் பணத்தை பயன்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் வேறு ஒரு வைரமும் கிடைக்குமா என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







