விவசாயிகளின் பொருளாதாரம் உயரக் கூடாது என்றே திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக எல்.முருகன் கூறியுள்ளார்.
வேதாரண்யம் மருதூர் வடக்கு ஊராட்சியில், விவசாயிகளின் நண்பன் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் ,திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் விவசாயிகளுக்கு எதிராக நடந்து வருகின்றன எனவும், 2021 சட்டசபை தேர்தலில் திமுகவை விவசாயிகளும் பொதுமக்களும் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்றும் கூறினார்.







