விடுமுறை நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் நேற்றைய முன்தினம் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு…

கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் நேற்றைய முன்தினம் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மழை காரணமாக குறைந்த அளவு பக்தர்களே வருகை தந்தனர்.

இந்நிலையில் 2 நாட்களாக திருவண்ணாமலையில் மழையின் தாக்குதல் குறைந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்ததால் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்ட 14 ஆயிரம் போலீசார் அப்படியே இன்று வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.