விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்த போது 12ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த தொரவி பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு வராக நதியில் நண்பர்களுடன் குளித்தபோது தமிழ்வேந்தன் நீரில் மூழ்கி மாயமானார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருநாட்களாக தமிழ்வேந்தனின் உடலை தேடி வந்தனர். இந்நிலையில், வராக நதியில் இருந்து 50 அடி தொலைவில் மிதந்து வந்த தமிழ்வேந்தனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.







