டில்லியில் 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
டில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். மக்களவை மாநிலங்களவை எம்பிக்களுக்கான அலுவலகங்கள் அடங்கிய வளாகம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் எழுப்பப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இந்த விழாவானது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற உள்ளது.
மேலும் விழாவில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.







