ராஜஸ்தான், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதை, தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று, இதுவரை 4 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அனைவரும் முகக் கவசம் நிச்சயம் அணியவேண்டும், என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.







