மூன்றாவது தவணை தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பலனளிக்குமா?; சோதனையை துவக்கிய பாரத் பயோடெக் நிறுவனம்

மூன்றாவது தவணையாக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா என்ற ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு இப்போது கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.…

மூன்றாவது தவணையாக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா என்ற ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு இப்போது கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கோவாக்சின், மற்றும் கோவிட் ஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் 81 சதவிகிதம் சிறப்பான செயல்திறன் கொண்டதாக ஏற்கெனவே நடந்த சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த மருந்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கத்தேவையான ஆய்வுகளை மத்திய அரசின் அனுமதியோடு பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 3ம் கட்ட சோதனையில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்து சோதனை செய்யப்பட்டது. அவர்களை கொண்டே 3வது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா என கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.