மீண்டும் கொரோனா: தமிழகத்தில் 24மணி நேரத்தில் 1066 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்…

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 10 ஆயிரத்து 80ஆக அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் 12பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.அதே நேரத்தில், இன்று ஆயிரத்து 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 88 ஆயிரத்து 742ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவில் கொரோனாவால் குணமடைவோர் விகிதம் 95 புள்ளி 69 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும்,

இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 96 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், 23 ஆயிரத்து 950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24மணி நேரத்தில் தேசிய அளவில் கொரோனாவுக்கு 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply