மயிலாடுதுறை பெரியமாரியம்மன் கோயில் தீ மிதி உற்சவம்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயிலின் 61…

மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயிலின் 61 ம் ஆண்டு தீ மிதி திருவிழா கடந்த 2ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கிய நிலையில் விழாவின் 10ம் நாளில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கி 20 அடி நீள அலகு குத்தியும், சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. பின்னா் தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்த நிலையில் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.