மநீம தலைவர் கமலின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளயீடு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின், முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற ஒற்றை குறிக்கோளுடன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின், முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற ஒற்றை குறிக்கோளுடன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13,14,15,16 ஆகிய நான்கு நாட்கள், மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில், முதல்கட்ட பிரச்சாரத்தை கமல்ஹாசன் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply