மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்த்த இளைஞனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த தாய்!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில், பணியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பிலிஸ் பெனா எனும் பெண், தன் வீட்டின் முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.…

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில், பணியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பிலிஸ் பெனா எனும் பெண், தன் வீட்டின் முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன் மகள் அவ்வறையில் இல்லை என்பதை அறிந்த அவர், சற்றே சுதாரித்து அந்த இளைஞனை சுற்றி வளைத்து கீழே வீழ்த்தினார். பின்னர், தப்பியோட முயற்சித்த அந்த இளைஞனை விரட்டி பிடித்த அப்பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, சத்தம் கேட்டு வேறொரு அறையில் இருந்த வெளியே வந்த பிலிஸ் பெனாவின் மகள், போலீசார் வரும்வரை தன் தாயுடன் சேர்ந்து அந்த இளைஞனை தப்பவிடாமல் பார்த்துக் கொண்டார்.

விசாரணையில் அந்த இளைஞன் 19 வயதான
ஜேன் ஹாக்கின்ஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மாக்களின் அன்பு, பாசம், சாந்தம் என அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தாலும், தன் குழந்தைகளுக்கு ஓர் ஆபத்தென்றால் அனைத்தையும் தகர்த்தெரியும் தன்னிகரற்றவர்கள் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு சாட்சி!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply