போராட்டம் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு…

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதைத் தொடர்ந்து அரசின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு செவிசாய்க்காமல் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் விஜியன் பவனில் நாளை பிற்பகல் 2 மணி அளவில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விவசாயிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply