30.9 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் Instagram News

பைனாப்பிள் மோமோ செய்வது எப்படி? வீடியோ வைரல்!

பைனாப்பிள் மோமோ செய்முறை தொடர்பாக வாசகர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
மோமோ என்பது பிரபலமான திபெத்திய, நேப்பாளிய உணவு ஆகும். இது நமது கொளுக்கட்டை போன்ற அமைப்பில் இருக்கும். சிக்கன், மட்டன் மோமோவுக்கு  ஏராளமான ரசிகர்கள் உண்டு என்று கூட கூறலாம்.
ஆனால் பைனாப்பிள் மோமோவை நீங்கள் ருசித்தது உண்டா? ஆம். இன்று இணையத்தில் பல விதமான மற்றும் சுவையான உணவு வகைகள் தொடர்பான வீடியோ நாள்தோறும் பதிவிடப்படுகிறது. அதனை பார்த்து உணவு தயாரித்து வீட்டில் உள்ளவர்களிடம் பாராட்டு பெறும் இல்லத்தரசிகள் உண்டு. உனக்கு வேற வேலை இல்லையா? நாங்க தான் கிடைத்தோமா என திட்டு வாங்குபவர்களும் உண்டு.
இந்நிலையில் ஜதின் குமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெருவோர கடைக்காரர் ஒருவர் அன்னாசிப்பழ மோமோ தொடர்பான வீடியோ இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் அன்னாசிப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கும் கடைக்காரர் பின்னர் அவற்றை மோமோவில் வைத்து ஆவியில் வேக வைக்கிறார். பின்னர் அப்பளம் போல் எண்ணெய்யில் பொறித்து எடுக்கிறார். அவரின் இந்த வீடியோவை பாராட்டியும் கழுவி ஊத்தியும் வாசகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading