டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். மக்களவை மாநிலங்களவை எம்பிக்களுக்கான அலுவலகங்கள் அடங்கிய வளாகம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் எழுப்பப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற உள்ளது.
வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்ற பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பூஜைகளை செய்தார். அப்போது, அவர் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றம் வரும் 2022ம் ஆண்டு திறப்பு விழா காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம்







