அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவை வலுபடுத்தியதற்காக அமெரிக்காவின் உயரிய விருதான “லெஜியன் ஆஃப் மெரிட்” என்ற விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் நல்ல முன்னேற்றம் கண்டன. இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொழில் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவை வலுபடுத்தியதற்காக அமெரிக்காவின் உயரிய விருதான “லெஜியன் ஆஃப் மெரிட்” என்ற விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த விருதை, பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்று கொண்டார்.
இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு, ‛லிஜியன் ஆப் மெரிட்’ என்ற உயரிய விருதை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்று கொண்டார் என தெரிவித்துள்ளார்.







