பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம்: நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை!

பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து,…

பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரும் 25 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளை நியமிக்கும்போது, பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழலை ஒழிப்பதற்காக தான் கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும், ஓட்டுக்கும் பணம் கொடுக்க கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply