நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டும்: சீமான்

நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டுமென, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 224ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மறைந்த எழுத்தாளர் தொ.பிரபாகரனுக்கு,…

நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டுமென, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 224ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மறைந்த எழுத்தாளர் தொ.பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமன், ‘விஜய் உட்பட நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் என தான் கூறவில்லை எனவும், மக்களுக்காக குரல் கொடுத்து போராடிவிட்டு, அதன் பின்னர் வர வேண்டும் என்றே கூறியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் எனும் தகுதி மட்டுமே, அரசியலுக்கு வரும் தகுதி என்பதை, தான் ஏற்கவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply