தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம்! – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்!

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக…

Image

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். இதில் மத்திய உயர்கல்வி செயலாளர் அமித் கரே, பள்ளிக்கல்வி செயலாளர் அனிதா கார்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை சரியான கிடைப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதற்காக உதவி எண்களை உருவாக்கவும், மாணவர்களின் அனைத்து புகார்களும் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார்.

Image

அடுத்த கல்வியாண்டு முதல், பொறியியல் உள்பட தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் பயில்வதற்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதனை செயல்படுத்த சில ஐ.ஐ.டி. மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு வாரியங்களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை தேசிய தேர்வுகள் முகமை உருவாக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு இயக்கத்தை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply